சொத்துக்கள் ஏலம்;எங்களுக்கு வருமானத்திற்கு வழிகள் இல்லை: பிரேமலதா விஜயகாந்த்

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2019 05:38 pm
we-have-no-way-of-income-premalatha-vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி ஆகியவை ஏலத்தில் விடப்படுவது குறித்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை மேம்படுத்த கடன் வாங்கியிருந்தோம். கல்லூரியில் வரும் வருமானத்தை வைத்து கல்லூரி நிர்வாகத்தை நடத்த முடியவில்லை. கல்லூரியை தொடர்ந்து நடத்துவோம், கடன் பிரச்னையை சட்டபூர்வமாக எதிர்கொள்வோம். பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்கின்ற பிரச்சாரத்தால் சேர்க்கை குறைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலன பொறியியல் கல்லூரிகள் கடனில்தான் உள்ளன’  என்று பிரேமலதா அளித்தார்.

மேலும், கேப்டன் சினிமாவில் நடிக்கவில்லை என்பதாலும், கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டுவிட்டதாலும், எங்களுக்கு வருவாய் தரும் மூலங்கள் தற்போது எதுவும் இல்லை என்று தெரிவித்த பிரேமலதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த்  நலமாக உள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும் என்றும்  கூறியுள்ளார்.

ரூ.5.52 கோடி பாக்கிக்காக விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏலத்தில் விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close