தண்ணீர் தட்டுப்பாடுக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2019 11:48 am
dmk-protest-against-water-scarcity

குடிநீர் பிரச்னையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரும் பொருட்டும், வருங்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி திமுகவினர் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் கோடை காலத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத அவல நிலை இருந்து வருகிறது. மக்கள் குடிநீருக்காக ஆங்காங்கே குடங்களுடன் தண்ணீருக்காக அலையும் சூழ்நிலையை காண முடிகிறது. 

இதையடுத்து தமிழக அரசு, லாரிகளின் மூலமாக மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருகிறது. இருந்தும் பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்து வருகிறது.

இதற்கிடையே, குடிநீர் பிரச்னையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரும் பொருட்டு வருகிற ஜூன் 22ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அமைதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சென்னை, திருச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் காலிக் குடங்களுடன் அதிமுக அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கத்தில் எம்பி தயாநிதி மாறன், சேகர் பாபு, ஜாபர்கான்பேட்டையில் மா சுப்பிரமணியன், திருச்சியில் கே என் நேரு, திருவண்ணாமலையில் எ.வ.வேலு ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

newstm.in


 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close