தொண்டர்களை, ஏமாற்றி அதிமுக கட்சியில் இணைக்கின்றனர்: டிடிவி தினகரன்

  அனிதா   | Last Modified : 22 Jun, 2019 04:37 pm
aiadmk-are-cheating-in-the-membership-admission

அமமுக கட்சியினரை பொய் சொல்லி ஏமாற்றி அதிமுக கட்சியில் இணைப்பதாகவும், அவர்கள் மீண்டும் தங்களது கட்சிக்கே வந்துவிடுவதாகவும் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

அமமுகவின் திருச்சி மாநகர், மற்றும் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இனிமேலாவது தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

நாங்குநேரி, களக்காடு பகுதியில் உள்ள தங்கள் கட்சியின் கிளை செயலாளரை ஏமாற்றி முதல்வரிடம் கூட்டி சென்றிருப்பதாகவும், தற்போது அவர்கள் எங்கள் கட்சிக்கு திரும்பி வந்துவிட்டதாகவும் தெரிவித்த அவர், தங்களை லெட்டர்பேடு கட்சி என விமர்சிப்பவர்கள் தங்களது கட்சியினரை பொய் சொல்லி ஏமாற்றி அவர்கள் கட்சியில் இணைப்பதாக குற்றம்சாட்டினார். 

மேலும், தனது சொந்த தொகுதியான ஆர்.கே.நகரில் டெபாசிட் வாங்க முடியாத ஜெயக்குமார் தங்களை விமர்சிப்பதாக டிடிவி.தினகரன் விமர்சித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close