ஒரு மாவட்டச் செயலாளராக எனது கருத்தை முன்வைத்தேன்: கே.என்.நேரு விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2019 05:07 pm
kn-nehru-press-meet

உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்று கூறிய கே.என்,நேரு, ஒரு மாவட்டச் செயலாளராக எனது கருத்தை முன்வைத்தேன் என்று தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். 

திமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேரு இன்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். ’காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது..’என்ற நேரு கூறியது குறித்த கேள்விக்கு, “காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேற வேண்டும் என்று நான் கூறவில்லை. காங்கிரஸை விட திமுக அதிக இடங்களில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் பற்றி கருத்து கூறினேன். 

திமுக தலைவருக்கு முழுமையாக கட்டுப்பட்ட ஒரு மாவட்ட செயலாளர் நான். ஒரு மாவட்டச் செயலாளராக எனது கருத்தை முன்வைத்தேன் மாவட்ட செயலாளராக நான் எப்படி முடிவு எடுக்க முடியும். திமுக தலைவர் தான் முடிவு எடுப்பார்.

திமுக தனித்து நிற்கவே தலைமையிடம் கேட்போம். ஆனால், காங்கிரஸ் கூட்டணி உறுதி என்று தலைமை கூறினால் அதற்கும் கட்டுப்படுவோம். நான் பேசியது கலகக் குரலும் அல்ல; கழகத்தின் குரலும் அல்ல. 

கூட்டணியில் இருந்த போதே காங்கிரஸார் கலைஞரை விமர்சனம் செய்தனர். அதனை பொறுத்துக்கொண்டு தான் நாங்கள் இப்போதும் கூட்டணியில் உள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் கூடுதல் இடத்தில் நிற்போம்” என்று பேசியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close