தண்ணீர் தட்டுப்பாடு...தமிழக அரசை திட்ட மட்டும் செய்யும் திமுக... களத்தில் இறங்கிய ரஜினி மக்கள் மன்றம்!

  கிரிதரன்   | Last Modified : 22 Jun, 2019 09:46 pm
rajinikanth-s-organisation-supplies-water-to-parched-chennai-amid-severe-water-crisis-but-dmk-corners-state-govt-only

சென்னையில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடும் பகுதிகளில், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் பணியை ரஜினி மக்கள் மன்றம் செய்து வருகிறது. ஆனால், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக, தமிழக அரசை விமர்சிப்பதை தாண்டி, இப்பிரச்னையை தீர்க்க ஆக்கப்பூர்வமாக என்ன பங்களிப்பை அளித்து வருகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தண்ணீர் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதுவும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு நீர்தேக்கங்கள் வற்றிவிட்ட நிலையில், சென்னை மாநகரில் தண்ணீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தலையாய இப்பிரச்னையை தீர்க்கும் நோக்கில், வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு ரயில்கள் மூலம் சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்துக்காக, ரூ. 65 கோடி ஒதுக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னைக்கு, தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையும், அலட்சிய போக்கும்தான் காரணம் என திமுக குற்றம்சாட்டி வருகிறது.

மேலும், இப்பிரச்னையில் தமிழக அரசை கண்டித்து திண்டுக்கல் ,சேலம், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதேசமயம் நடிகர் ரஜினியின், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இன்று, சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள  இடங்களில் ஒன்றான கோடம்பாக்கம் பகுதியில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close