எஸ்.வி.சேகரின் 'அல்வா' நாடகம் இடமாற்றம்! நாடகத்தின் பெயரும் மாற்றம்..

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2019 10:38 am
s-ve-shekher-derama-place-changed

எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் இன்று காலை நடைபெறவிருந்த எஸ்.வி.சேகரின் 'அல்வா' நாடகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடகத்தின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. 

எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் எஸ்.வி சேகர் இன்று(ஜூன் 23) தனது நாடகம் அரங்கேற அனுமதி பெற்றிருந்தார். இதையடுத்து நடிகர் சங்கத் தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த முடியாது என்றும் வேறு இடத்தில் நடத்திக்கொள்ளும்படியும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதனால் நடிகர் சங்கத் தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடக்காத போதும், எஸ்.வி.சேகர் தனது நாடகம் நடைபெறும் இடத்தை மாற்றியுள்ளார். 

நாடக நிகழ்ச்சி இன்று மாலை 7 மணிக்கு தியாகராஜர் அரங்கில் நடைபெறும் எனவும் நாடகத்தின் பெயர் ”காமெடி தர்பார் ”எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close