முன்னாள் காவல்துறை டிஜிபி வி.ஆர்.லட்சுமி நாராயணன் காலமானார்

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2019 01:00 pm
former-tamil-nadu-dgp-v-r-lakshminarayanan-passes-away

முன்னாள் காவல்துறை டிஜிபி வி.ஆர்.லட்சுமி நாராயணன் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 91.

லட்சுமி நாராயணன் தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றியுள்ளார். சிபிஐ-யில் அதிக காலம் பணியாற்றியவர் என்ற பெருமையை பெற்றவர். 

வழக்கறிஞர் படித்த அவர், ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்று 1951ல் காவல்துறையில் இணைந்தார். காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோர் ஆட்சிக்காலத்தில் அவர்களுடன் பணியாற்றியவர். 

1977ம் ஆண்டு எமெர்ஜென்ஸிக்கு பிறகு மொரார்ஜி தேசாய் அரசு அமைந்த பிறகு, சிபிஐ அதிகாரி என்ற முறையில் இந்திரா காந்தியை கைது செய்தவர் லட்சுமி நாராயணன். பின்னர் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு லட்சுமி நாராயணன் சிபிஐ-யில் இருந்து தமிழக காவல்துறைக்கு மாற்றப்பட்டார்.

1970 முதல் 1980 வரை சிபிஐ-யில் இருந்தார். பின்னர் தமிழக சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி 1985ல் பணி ஓய்வு பெற்றார். தமது பணிக்காலத்தில் பலருக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். 

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் லட்சுமி நாராயணனின் சகோதரர் ஆவார். 

தற்போது சென்னை அண்ணா நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அண்ணா நகரில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

அவரது மறைவுக்கு காவல்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close