மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை : அமைச்சர் தங்கமணி

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2019 08:12 pm
800-mw-power-plant-to-be-started-in-chennai-power-cut-no

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

ஒசூர் அருகே உத்தனப்பள்ளியில் ரூ.168 கோடி செலவில் துணைமின் நிலைய கட்டடங்களை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

இதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி, ‘ நடப்பாண்டு இறுதிக்குள் சென்னையில் 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையம் தொடங்கப்படும். 2024 -ஆம் ஆண்டுக்குள் 4,000 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம் கொண்டு வரப்படும். தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. இயற்கை சீற்றங்களால் சில இடங்களில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது’ என்றார் அமைச்சர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close