அனைத்து தேர்வர்களுக்கும் மறுத்தேர்வு நடத்த வாய்ப்பில்லை: ஆசிரியர் தேர்வு வாரியம்

  அனிதா   | Last Modified : 24 Jun, 2019 01:24 pm
there-is-no-chance-of-re-exam-for-all-candidates

முதுகலை ஆசிரியர் பணிக்கான கணினி வழி தேர்வின் போது சர்வர் பிரச்சனையால் ரத்து செய்யப்பட்ட 3 மையங்களில் மட்டும் மறுத்தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் முதுகலை ஆசிரியர் பணிக்கான கணினி வழி தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், சிவகங்கை, திருச்செங்கோடு, கும்பகோணம், நெல்லை உள்ளிட்ட இடங்களில் சர்வர் கோளாறு காரணமாக தேர்வாளர்களால் தேர்வு எழுத முடியாமல் போனதாக கூறப்பட்டது. மேலும், தேர்வறையில் தேர்வர்கள் செல்போனுடன் இருப்பது போன்ற வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  

இந்நிலையில், வீடியோ குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் வெங்கடேசன் விளக்கமளித்துள்ளார். நேற்று நடைபெற்ற முதுகலைஆசிரியர் பணிக்கான கணினி வழி தேர்வின் போது, திருச்செங்கோட்டில் சர்வர் பிரச்சனை காரணமாக தேர்வு  ரத்து செய்யப்பட்டது. தேர்வு ரத்தான பிறகு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், நேற்று தேர்வெழுதிய அனைத்து தேர்வர்களுக்கும் மறுத் தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்றும், சர்வர் பிரச்னையால் ரத்து செய்யப்பட்ட 3 மையங்களில் மட்டும் மறு தேர்வு நடத்தப்படும் எனவும் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close