லாபத்தை குறைத்துக் கொண்டு, சேவை மனப்பான்மையுடன் குடிநீர் விநியோகம் செய்யுங்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

  Newstm Desk   | Last Modified : 24 Jun, 2019 05:56 pm
reduce-profit-margins-and-distribute-drinking-water-with-service-mindedness-minister-sp-velumani

தனியார் லாரி உரிமையாளர்கள் லாபத்தை குறைத்துக் கொண்டு, சேவை மனப்பான்மையுடன் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை மேற்கொண்டார்.

இதன்பின் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், ‘லாபத்தை குறைத்துக் கொண்டு, சேவை மனப்பான்மையுடன் குடிநீர் வழங்கும்படி  தனியார் லாரி உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டோம். குடிநீருக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படாது. மழைநீர் சேமிப்பு திட்டம் குறித்து ஆய்வு செய்ய கூடுதலாக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வீடுகள், குடியிருப்புகள் வாரியாக சென்று மழைநீர் சேகரிப்பு குறித்து அக்குழு ஆய்வு செய்யும். கல்குவாரி, ஏரிகள் மூலமாக தண்ணீர் எடுக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது’ என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close