மேகதாதுவில் அணை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

  Newstm Desk   | Last Modified : 24 Jun, 2019 06:56 pm
megadadu-dam-chief-minister-s-letter-to-pm

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும், ‘மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது. தமிழக அரசின் கருத்துகளை கேட்காமல் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது.

மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட முயற்சிப்பது உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் அனுமதி பெறாமலேயே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கிறது.

கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க பிரதமர் நேரடியாக தலையீட்டு ஜலசக்தி துறைக்கு ஆணையிட வேண்டும்’ என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close