கல்வி கற்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும்

  Newstm Desk   | Last Modified : 24 Jun, 2019 08:14 pm
all-educated-students-should-get-a-job-minister-sengotaiyan

கல்வி கற்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதே அதிமுக அரசின் நோக்கம் என்றும், மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதற்காகவே ரேங்க் முறை நீக்கப்பட்டதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும். அடுத்த 3 மாதங்களில் 6 லட்சத்திற்கும் மேல் இலவச மடிக்கணினி வழங்கப்படும். நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் தமிழக அரசின் எண்ணம். தமிழக மாணவர்களும் நீட் தேர்வு எழுதும் வகையில் தகுதியான மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படும்’ என்றும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார்.

12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மடிக்கணினி கோரி இன்று போராடியது குறித்த அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்புத்தகத்தை படிக்க மாணவர்களுக்கு மடிக்கணினி அவசியமாகும். நடப்பு ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய பின்பு, முன்னாள் மாணவர்களுக்கு வழங்கப்படும்’ என்று பதிலளித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close