அண்ணாநகரில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள்: வாகன ஓட்டிகள் இனி தப்பிக்க முடியாது

  Newstm Desk   | Last Modified : 24 Jun, 2019 09:08 pm
in-anna-nagar-sophisticated-cctv-cameras-motorists-can-no-longer-escape

சென்னை அண்ணாநகரில் 5 சந்திப்புகளில் அதிநவீன 63 சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு தொடங்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று தொடங்கிவைத்தார்.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகன பதிவு எண்ணை தானாகவே இந்த அதிநவீன  சிசிடிவி கேமராக்கள் பதிவு செய்துவிடும். கேமரா காட்சிப் பதிவின் அடிப்படையில் சம்பந்தபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்படும்.

இந்த விழாவில் போக்குவரத்து காவல்துறை ஆணையர் சமயமூர்த்தி, கூடுதல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close