தங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி

  அனிதா   | Last Modified : 25 Jun, 2019 09:23 am
ttv-dhinakaran-meets-executives-for-audio-issue

தங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம் தொடர்பாக அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

அமமுக கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்செல்வன் அக்கட்சியின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிப்பது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனின் உதவியாளரிடம் நான் விஸ்வரூபம் எடுத்தால் தாங்கமாட்டீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்த ஆடியோ விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து டிடிவி தினகரன் இன்று சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் காலை 10 மணியளவில் தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ கதிர்காமு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close