பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 10:06 am
import-of-plastic-waste-banned-from-august-this-year-minister-prakash-javadekar

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூன் 17ல் தொடங்கி நடைபெற்று வரும் சூழ்நிலையில், ராஜ்யசபாவில் எம்.பி ஒருவரின் பிளாஸ்டிக் தடை குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவு உருவாகிறது. அவற்றில் 13 ஆயிரம் முதல் 14 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. எனவே, காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்தும் விதமாக, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close