தங்கத்தமிழ்ச்செல்வன் விரைவில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்: டிடிவி தினகரன் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 12:55 pm
thanga-tamil-selvan-will-be-removed-from-party-s-responsibilities-ttv-dinakaran

அமமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் விரைவில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார் என கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

அமமுக கொள்கை பரப்புச் செயலாளரான தங்கத் தமிழ்செல்வன், டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிப்பது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், டிடிவி தினகரனின் உதவியாளரிடம், 'தினகரன் மிகவும் மோசமான ஒரு அரசியலை முன்னெடுக்கிறார். நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் தாங்கமாட்டீர்கள்' என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து டிடிவி தினகரன் இன்று சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் காலை 10 மணியளவில் தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த கூட்டமானது திட்டமிடப்பட்ட ஒரு கூட்டம் தான். தங்கத்தமிழ்ச் செல்வனின் பேச்சு சரியில்லை என்று ஏற்கனவே எனக்கு செய்திகள் வந்தது. இருந்தாலும், முதல் முறையாக தலைமை கழக நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வெளியாகப் போகிறது. வருகிற ஜூலை முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். இந்த நிலையில், கட்சியின் முதல் நடவடிக்கையாக 20 ஆண்டு காலம் உறுப்பினராக இருந்த ஒருவரை நீக்க வேண்டாம் என்று நினைத்தேன். 

தமிழ்ச்செல்வனிடம் இனி விளக்கம் கேட்க முடியாது; விரைவில் புதிய கொள்கை பரப்புச் செயலாளர் நியமிக்கப்படவுள்ளார். கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார். புதிய தலைமை கழக நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். 

ஏற்கனவே அவருக்கு நான் இன்று எச்சரிக்கை விடுத்தேன். இவ்வாறு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தால் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து விலக்கி விடுவேன் என்று கூறினேன். அவர் கேட்கவில்லை. 

எங்களது கட்சியில் அனைவரும் சுதந்திரமாக தான் இருக்கிறார்கள். அவர் நினைத்தால் விஸ்வரூபம் எடுப்பேன் என்று கூறுகிறார். அவர் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது. என் முன்னால் வந்தால் பொட்டிப்பாம்பாக அடங்கிப்போய் விடுவார்" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close