காய்கறி விலை கணிசமாக உயர்வு!

  அனிதா   | Last Modified : 25 Jun, 2019 01:48 pm
vegetable-prices-go-up

தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் காய்கறிகளின் விலை பலமடங்கு உயர்ந்து வருகிறது. 

தமிழகத்தில் பருமழை எதிர்பார்த்த அளவு பெய்யாத காரணத்தால் தண்ணீர் பற்றாகுறை நிலவி வருகிறது. விவசாயத்திற்கு முக்கிய காரணியாக உள்ள தண்ணீர் இல்லாமல் காய்கறிகளின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களாக  சென்னையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது விளைச்சல் குறைவு காரணமாக வரத்து குறைந்துள்ளது.  சராசரியாக 400 முதல் 450 லோடு லாரிகள் வரும் இடத்தில் தற்போது 200 முதல் 250 லாரி லோடுகளே வந்து கொண்டிருப்பதாகவும் இதன் காரணமாகவே அனைத்து காய்கறிகளின் விலைகளும் அதிகரித்து விட்டதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் காய்கறி விலை குறைய வாய்ப்பில்லை எனவும் மழைக்காலம் தொடங்கிய பின்னர் விளைச்சல் அதிகரித்தால் மட்டுமே காய்கறி விலையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி விளைச்சல் இன்றி தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close