காவிரியில் தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவு!:

  அனிதா   | Last Modified : 25 Jun, 2019 01:46 pm
commission-order-to-open-water-in-cauvery

காவிரியில் தமிழத்திற்கு தேவையான 40.43 டி.எம்.சி தண்ணீர் திறக்கும் படி காவிரி மேலாண்மை ஆணையம் கார்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4 வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.  இதில்  ஜூலை மாதத்திற்கு 31.24 டி.எம்.சி தண்ணீர் காவிரியில் திறந்துவிட கார்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. மேலும், கடந்த மாதத்திற்குரிய  9.19 டிஎம்.சி தண்ணீரும் இதுவரை திறந்துவிடப்படவில்லை என்பதால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கமுடியவில்லை.

இதனால், குறுவை சாகுபடி விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே ஜூன், ஜூலை மாதத்திற்குரிய நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது. 

இதையடுத்து, ஜூன், ஜூலை மாதத்திற்குரிய 40. 43 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிடும் படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அப்போது, கர்நாடகா அணைகளில் போதிய அளவு நீர் இல்லை எனவும், தண்ணீர் இல்லாத பட்சத்தில் எப்படி தண்ணீர் திறக்க முடியும் எனவும் கர்நாடக அரசு கேள்வி எழுப்பியது. 

அதற்கு, நீர் வரத்தை பொறுத்து தமிழகத்திற்கு தேவையான நீரை வழங்கும்படி காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியது. இதையடுத்து, மழையை பொறுத்து தண்ணீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம் தெரிவித்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close