வருகிற ஜூலை 5ம் தேதி நளினியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 05:59 pm
rajiv-murder-case-convict-nalini-to-be-appeared-on-july-5-for-parole-madras-high-court

தனது மகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு தொடரப்பட்ட வழக்கில், நளினியை வருகிற ஜூலை 5ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம், சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி, வேலூர் சிறையில் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.  இந்நிலையில், இவர் தனது மகளின் திருமணம் விரைவில் நடக்க உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மேலும், இந்த மனு மீதான விசாரணையில் தான் நேரில் ஆஜராகி, தானே வாதிட அனுமதியும் கோரியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் வருகிற 5ம் தேதி நளினியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close