இரண்டரை வயது சிறுமி கொலை: உறவினர் கைது

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 07:51 pm
two-and-a-half-year-old-girl-murdered-relative-arrest

கோவையில் இரண்டரை வயது சிறுமி  கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை விளாங்குறிச்சியில் வசிக்கும் கனகராஜ் - காஞ்சனா தம்பதியினரின் இரண்டரை வயது  மகள் மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்த விவாகரத்தில், 2 தனிப்படை அமைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில், காஞ்சனாவின் பெரியப்பா மகன் ரகுநாதனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், ரகுநாதன் பாலியல் நோக்கதோடு சிறுமியைக் தூக்கி சென்றதாகவும் , பின்பு சிறுமி கத்தியதால் ரகுநாதன் சிறுமியின் வாயைக் பொத்தியுள்ளார். உடனே சிறுமி மயங்கியதையடுத்து சிறுமியைக்  வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கிணற்றில் வீசியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து காவல்துறையினர் ரகுநாதனை விசாரித்து வருகின்றனர். 

மேலும் ரகுநாதனுடன் வீட்டில் தங்கியிருந்த அவரது உறவினர் பூபதி என்ற இளைஞரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close