குடிநீர் பிரச்னைக்கு காரணமே இவங்கதான்

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 08:18 pm
dmk-is-the-cause-of-the-drinking-water-problem

தமிழகத்தில் குடிநீர் பிரச்னைக்கு காரணமே திமுக தான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னை கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊழல் குற்றச்சாட்டிற்காக ஆட்சியை இழந்த கட்சி திமுக தான் என கூறினார். திமுகவால் தான் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஆட்சிகாலத்தில்தான் ஏரி குளங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டதாகவும்  தெரிவித்தார். 

தமிழகத்தில் ஸ்டாலின் சொல்வது  போல் ஆட்சி மாற்றம் ஏற்பட சிறிதளவும் வாய்ப்பு இல்லை என தமிழிசை கூறினார். நதி நீர் இணைப்பு திட்டத்தால் தமிழகம் நன்மை பெறும் என தெரிவித்த அவர், மழை நீர் சேகரிப்பு திட்டம் அனைத்து வீடுகளிலும் , அரசு கட்டிடங்களிலும் கொண்டுவரவேண்டும் என கூறினார்.

மத்திய அரசின் எய்ம்ஸ், ஸ்மார்ட் சிட்டி போன்ற பல திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு மக்கள் நன்மை பயக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்தார்.

மேகதாதுவில் அணைகட்டுவதால் தமிழகம் பாதிக்கும் என்றால் தமிழக பாஜக  ஏற்றுக்கொள்ளாது என்றும், நீட் நுழைவுத் தேர்வில் இட ஒதுக்கீடு சரியான முறையில் கொடுக்கப்படுவதாகவும் கூறினார்.

அதிமுக கட்சியினரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் அதனால் யாகம் நடத்துவது எந்த தவறு இல்லை என்று தெரிவித்த அவர், திமுகவினரும் நல்ல நேரம் பார்ப்பவர்கள் அதை வெளிப்படையாக அவர்கள் சொல்வது இல்லை எனவும் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close