இவர்களை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் : அமைச்சர் நிபந்தனை

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 09:06 pm
anyone-can-join-the-aiadmk-in-tamil-nadu-as-sasikala-excluding-family-said-fisheries-minister-jayakumar

சசிகலா குடும்பத்தினரை தவிர்த்து யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் 

சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசிய அவர், "ஊழலுக்கு பேர் போன கட்சி, ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட கட்சி திமுக எனவும், அந்தக் கட்சியை சேர்ந்த தயாநிதி மாறன் எந்தவித முகாந்திரமுமின்றி இன்று நாடாளுமன்றத்தில் பேசியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

மேலும், தங்கத்தமிழ் செல்வன் குறித்து எழுப்பிய கேள்விக்கு சசிகலா, தினகரன் குடும்பத்தினரை தவிர்த்து யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் எனவும், இணைப்பது தொடர்பாக அதிமுக தலைமை முடிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார். 

தமிழகத்தை பொறுத்த வரையில் தண்ணீர் பஞ்சம் இல்லை எனவும், பற்றாக்குறை மட்டுமே நிலவுகிறது" அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close