என்னை யாரும் இயக்கவில்லை: தங்க தமிழ்ச்செல்வன்

  அனிதா   | Last Modified : 26 Jun, 2019 08:55 am
no-one-directed-me-thanga-tamilselvan

என்னை அதிமுகவினர் யாரும் இயக்கவில்லை என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 

அமமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரனை பற்றி பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், யாரோ அவரை பின்னால் இருந்து இயக்குவதாகவும், விரைவில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்பு மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், டிடிவி தினகரன் கருத்து தொடர்பாக செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிக்கு பேட்டியளித்த தங்க தமிழ்ச்செல்வன், தன்னை எஸ்.பி வேலுமணி, தங்கமணி என யாரும் இயக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், டிடிவி தினகரன் கட்சி தலைவர் போல் செயல்படாமல் பங்கரவாத அமைப்பின் தலைவர் போல் செயல்படுவதாகவும், கட்சி வேலைகளை பார்க்காமல் பொய் பேசி வருவதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close