சென்னை தண்ணீர் பற்றாக்குறை: வருத்தம் தெரிவித்துள்ள டைட்டானிக் பட ஹீரோ!

  அனிதா   | Last Modified : 26 Jun, 2019 10:39 am
water-shortage-in-chennai-titanic-film-hero-comment

சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடை நீக்க மழையால் மட்டுமே முடியும் என டைட்டானிக் பட கதாநாயகன் லியானார்டோ டி காப்ரியோ  கருத்து தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் உள்ள அனைவரையும் கவர்ந்த படம் டைட்டானிக். இந்த படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டப் படம். அதுமட்டுமின்றி 10க்கும் மேற்பட்ட ஆஸ்கர் விருதுகளை பெற்ற படம். இந்த படத்தின் ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ இன்ஸ்டாகிராமில் சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில், சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பான பிபிசி நிறுவனத்தின் செய்தியை சுட்டிக்காட்டி, இத்தகைய சூழலில் மழை மட்டுமே சென்னை மக்களை காப்பாற்ற முடியும் என பதிவிட்டுள்ளார். 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close