பள்ளி பால்கனி இடிந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்!

  அனிதா   | Last Modified : 26 Jun, 2019 10:16 am
3-students-injured-about-school-balcony-collapses

மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியின் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள அரசு உதவிபெறும் ஆயிர வைசிய வெள்ளியம்பலம் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளி கட்டிடம் நீண்ட காலமாக சிதலமடைந்து காணப்பட்ட நிலையில் இன்று திடீரென பால்கனி  இடிந்து விபத்து ஏற்பட்டது. 

இதில் சக்திவேல், குமரவேல், வீரக்குமார் ஆகிய 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதனை கண்ட ஆசிரியர்கள் உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவத்தை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close