ரிங் மாஸ்டர் டிடிவி மீது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர்: அமைச்சர்

  அனிதா   | Last Modified : 26 Jun, 2019 10:54 am
the-party-has-begun-raging-on-ring-master-ttv-minister

ரிங் மாஸ்டர் போல் செயல்பட நினைத்த தினகரன் மீது அவரது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 

மா.பொ. சிவஞானம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது உருவசிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தால் கட்சி தலைமை தான் அது குறித்து முடிவெடுக்கும் என தெரிவித்தார். 

மேலும், கொள்கை, கோட்பாடு, லட்சியம் இல்லாதது அமமுக கட்சி எனவும், பணத்தை வைத்து மட்டும் ஒன்றும் செய்துவிட முடியாது எனவும் கூறிய அமைச்சர், ரிங் மாஸ்டர் போல் செயல்பட நினைத்த தினகரன் மீது அவரது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர் என தெரிவித்தார். மேலும், அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பர் என யாரும் இல்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close