பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!

  அனிதா   | Last Modified : 26 Jun, 2019 11:44 am
chief-minister-s-consultation-with-pwd-officers

சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.  

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 28ஆம் தேதி தொடங்கவுள்ளது. 23 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதில், பொதுப்பணித்துறை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பணிகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  மேலும், குடிமராமத்துப் பணிகளை தீவிரமாக கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close