எந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்

  அனிதா   | Last Modified : 26 Jun, 2019 04:03 pm
no-intention-of-joining-any-party-thanga-tamilselvan

திமுக, அதிமுக என எந்த கட்சியிலும் இணையும் எண்ணம் தற்போது இல்லை என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "அமமுக கட்சி இன்னும் பதிவு செய்யப்படாத கட்சி என்றும், கொள்கையே இல்லாத கட்சி என்று விமர்சித்தார். தலைமையில் தவறு இருப்பதை சுட்டிக்காட்டினால் கட்சியை விட்டு நீக்குவதாக கூறுவது தவறு என குறிப்பிட்ட அவர், தினகரன் செய்த தவறுக்கு தானும் சிறிது காலம் உடந்தையாக இருந்ததாக கூறினார்.  

டிடிவி தினகரன் தனியாக முடிவெடுப்பதால் கட்சி பாதிப்படைவதாகவும், எல்லா தேர்தல்களிலும் தோல்வி அடைந்தும் தோல்வியை ஒப்புக்கொள்ள அவர் மறுப்பதாகவும் தெரிவித்த தமிழ்ச்செல்வன், அதிமுகவை மீட்க வேண்டும் என கட்சி தொடங்கிவிட்டு தற்போது அதை மறந்து செயல்பட்டு வருவதாக கூறினார். 

மேலும் சிறையில் இருக்கும் சசிகலாவை இதுவரை தினகரன் மட்டுமே தனியாக சந்தித்து வந்துள்ளதாகவும், வேறு நபர்கள் சந்திக்க  இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். வாய்ப்பு கிடைத்தால் சசிகலாவைச் சந்திப்பேன் எனவும் கூறினார்.

திமுக, அதிமுக என எந்த கட்சியிலும் இணையும் எண்ணம் தற்போது இல்லை என குறிப்பிட்ட அவர், சில நாட்கள் ஒய்வு தேவைப்படுவதாக தெரிவித்தார். அதேபோல் அதிமுகவில் இருந்து யாரும் தன்னை அணுகவில்லை என்றும், அமைச்சர்கள் யாரும் தன்னை இயக்கவில்லை என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close