சென்னைக்கு ரயிலில் தண்ணீர் : தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்!

  Newstm Desk   | Last Modified : 26 Jun, 2019 08:46 pm
chennai-water-crisis-tn-govt-wrote-letter-to-southern-railway

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் தினமும் தண்ணீர் கொண்டு வருவது தொடர்பாக, தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இப்பிரச்னையை தீர்க்கும் முக்கிய நடவடிக்கையாக, வேலூர் மாவட்டத்திலிருந்து ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. 

இந்த நிலையில், சென்னை குடிநீர் வாரிய நிர்வாகத்தின் சார்பில், தெற்கு ரயில்வேக்கு இன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "ஜோலார்பேட்டையிலிருந்து, சென்னை வில்லிவாக்கத்துக்கு ரயில்களின் மூலம் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் 10 மில்லியன் லிட்டர்கள் வீதம், 6 மாதத்துக்கு அங்கிருந்து தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்த தெற்கு ரயில்வே உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், தண்ணீரை கொண்டு வருவதற்கான வேகன்களை ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close