சுகாதாரத்துறை பட்டியலில் தமிழகத்திற்கு 9வது இடம்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2019 11:26 am
niti-aayog-health-index-tn-govt-writes-letter-to-centre

'நிதி ஆயோக்' வெளியிட்ட சுகாதாரத்துறை தரவரிசை பட்டியல் குறித்த விபரங்களில் முரண்பாடு உள்ளதாக தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும், சுகாதாரத்துறை குறித்த வசதிகளை அடிப்படையாகக் கொண்டு, நிதி ஆயோக் அமைப்பு சார்பில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, நடப்பு ஆண்டிற்கான சுகாதாரத்துறை தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. 

இதில், கடந்த ஆண்டில் 3ம் இடத்தில் இருந்த தமிழகம், இந்தாண்டு 9ம் இடத்திற்கு இறங்கியுள்ளது. கடந்த முறையைப் போலவே கேரளா தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஆந்திரா, மஹாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முறையே 2, 3, 4, 5ம் இடங்களை பெற்றுள்ளன. 

6ம் இடத்தில் ஹிமாச்சல் பிரதேஷ், 7ம் இடத்தில் ஜம்மு காஷ்மீர், 8ம் இடத்தில் கர்நாடகாவைத் தொடர்ந்து, 9ம் இடத்தில் தமிழகம் உள்ளது. அதைத் தொடர்ந்து, மற்ற மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. 

இந்நிலையில், இதுகுறித்த விபரங்களில் முரண்பாடுகள் உள்ளதாக தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதாவது, தமிழகத்தில் பெரும்பாலாக 99% பிரசவங்கள் மருத்துவமனைகளில் தான் நடைபெறுகின்றன. ஆனால், மத்திய அரசு வெளியிட்டுள்ள விபரத்தில் 80% என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் இதுதவிர அனைத்து குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனையில் முறையாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த விபரமும் மத்திய அரசின் விபரத்தில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது" என்று தமிழக தலைமை செயலர் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் தனித்தனியே மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close