தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டமும் ஏற்கப்படாது: முதலைமைச்சர்!

  அனிதா   | Last Modified : 27 Jun, 2019 12:29 pm
if-plan-to-affect-tamil-nadu-that-is-not-be-accepted

தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

நெம்மேலியில்  கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டத்தின் அடிப்படையில் ஜப்பான் பன்னாட்டு நிதி.கம் மூலம் இந்த கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 2021ஆம் ஆண்டுக்குள் பணிகள் நிறைவடைந்து தண்ணீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

வறட்சி பாதித்த பிற கடலோர மாவட்டங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த ஆய்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் பேரூரில் ரூ.6000 கோடி மதிப்பீட்டில் 400 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சென்னை மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும் எனவும், 2 வாரங்களுக்குள் ஜோலார்ப்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

காவிரியில் மாதந்தோறும் தண்ணீர் திறந்துவிடும் படி காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக  அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களால் கடல் அரிப்பு ஏற்படாது எனவும் அப்போது அவர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close