அந்தமான் யானை: வனத்துறையினரிடம் ஒப்படைப்பு!

  அனிதா   | Last Modified : 27 Jun, 2019 03:51 pm
the-andaman-elephant-is-take-over-to-the-forest-department

சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட அந்தமான் யானை விவகாரத்தில்,  நீதிமன்ற உத்தரவின்படி அந்த யானையை மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்

கடந்த 2007-ஆம் ஆண்டு அந்தமான் பகுதியிலிருந்து மலச்சி என்ற யானை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு என கூறி அந்தமானில் இருந்து தானமாக பெற்ற யானையை லட்சுமணன் என்பவர் அபகரித்து, மதுரையில் பிச்சை எடுக்கவைப்பதும் , திருமண நிகழ்ச்சிகளில், விருந்தினர்களுக்கு வரவேற்பு  அளிக்கவும் பயன்படுத்துவதாகவும் வனவிலங்கு ஆர்வலர் முரளி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில், மலச்சி யானையை பறிமுதல் செய்து யானைகள் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் வனத்துறையினருக்கு உத்தரவிட்டது.  அதன்படி,மதுரை தென்பழஞ்சி பகுதியில் லட்சுமணன் மறைத்து வைத்திருந்த யானையை மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரி சாபாப் தலைமையில் வனத்துறையினர் பறிமுதல் செய்து அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்துள்ளனர்.

யானைக்கு உரிய முறையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்ற பின்பு யானையை திருச்சியில் உள்ள யானைகள் பாதுகாப்பு முகாம் அல்லது கோயம்புத்தூரில் உள்ள பாதுகாப்பு முகாமில் ஒப்படைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close