திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்; திமுகவில் இணைகிறார் தங்கத் தமிழ்ச்செல்வன்!

  Newstm Desk   | Last Modified : 28 Jun, 2019 12:10 pm
thanga-tamilselvan-joined-in-dmk

டிடிவி தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலர் தங்கத் தமிழ்ச்செல்வன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணையவுள்ளார். 

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்செல்வன் இடையே கருத்து மோதல் நிலவியது. இந்த நிலையில்  டிடிவி தினகரனை, தங்கத் தமிழ்ச்செல்வன் கடுமையாக விமர்சிப்பது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால்,  விரைவில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தங்கத் தமிழ்ச்செல்வன் நீக்கப்படுவார் என டிடிவி தினகரன் அறிவித்தார். 

இதையடுத்து, அதிமுகவை புகழ்ந்துவந்த தங்கத் தமிழ்ச்செல்வன் அக்கட்சியில் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை அதிமுகவில் சேர்க்க தேனி மாவட்ட அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து, தங்கத் தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியுள்ளது. பேரவை கூட்டத்தொடரை எதிர்கொள்வது, எழுப்பவேண்டிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. 

இதன் தொடர்ச்சியாக, தங்கத் தமிழ்ச்செல்வன்  இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணையவுள்ளார். அனைத்து எம்.எல்.ஏக்களுடன் தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், செல்வேந்திரன் ஆகியோரும் அண்ணா அறிவாலயம் வந்துள்ளனர். 

முன்னதாக, தினகரன் கட்சியில் இருந்த வி.பி.கலைராஜன் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close