மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்: ரஜினிகாந்த்

  அனிதா   | Last Modified : 29 Jun, 2019 08:58 am
rainwater-harvesting-project-to-be-given-priority-rajinikanth

மழை நீர் சேகரிப்பு திட்டத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தர்பார் படப்பிடிப்பில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ரஜினி மக்கள் மன்றம் சார்பில் குடிநீர் விநியோகிக்கப்படுவது குறித்த கேள்விக்கு, அது நல்ல விஷயம் என்றும் அவர்களை மனமார பாட்டுவதாகவும், வாழ்த்துவதாகவும் தெரிவித்தார். 

மேலும் தற்போது நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும் என்றும், ஏரிகள், குளங்களை போர் கால அடிப்படையில் தூர்வார வேண்டும் எனவும் தெரிவித்தார். அதோடு மழை நீர் சேகரிப்பு திட்டத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கூறினார். 

நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க முடியாதது வருத்தமளிப்பதாகவும்,சரியான நேரத்தில் தபால் வாக்கு சீட்டு வந்து சேர வில்லை என்பதால் வாக்களிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close