காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவ விழாவில் ஆளுநர் கலந்துகொள்கிறார்!

  Newstm Desk   | Last Modified : 30 Jun, 2019 09:01 am
tn-governor-visits-kanchipuram-temple

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் வைபவ விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காஞ்சிபுரம் செல்கிறார். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில் அத்திவரதர் வைபவ விழாவானது நாளை(ஜூலை 1) காலை தொடங்குகிறது.   40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வு நடைபெறுகிறது. 

இந்நிலையில், அத்திவரதர் வைபவ விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காஞ்சிபுரம் செல்கிறார். இன்று இரவு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாளிகையில் தங்கி விட்டு, நாளை காலை அத்திவரதர் வைபவ விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்னை திரும்புகிறார். 

இந்நிகழ்வுக்கு ஆளுநர் வரும் அதே வேளையில்  லட்சக்கணக்கான பக்தர்களும் தரிசனம் செய்ய வருவதையொட்டி, அப்பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close