மருத்துவமனைகளில் தண்ணீர் பிரச்சனை இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

  அனிதா   | Last Modified : 30 Jun, 2019 12:44 pm
no-water-problem-in-hospitals-minister-vijayabaskar

தமிழகத்தின் எந்த அரசு மருத்துவமனைகளிலும் தண்ணீர் பிரச்னை ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் குறிப்பாக சென்னை அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில்,திருச்சியில் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எந்த அரசு மருத்துவமனையிலும் தண்ணீர் பிரச்னை ஏற்படவில்லை என்றும், தேவைப்படும் அரசு மருத்துவமனைகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் அப்போது குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close