மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 11:04 am
rajyasabha-election-dmk-candidates-announced

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தொ.மு.ச பொதுச் செயலளார் மு.சண்முகம் மற்றும் வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுவதாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற ஜூன் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் அதிமுகவுக்கு 3 இடங்களும், திமுகவுக்கு 3 இடங்கள் என சரிசமாக கிடைக்கும். 

அந்த வகையில்,  திமுக சார்பில் தொ.மு.ச பொதுச் செயலளார் மு.சண்முகம் மற்றும் வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுவதாக திமுக தரப்பில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஏற்கனவே முன்னதாக பேசியபடி, மீதியுள்ள ஒரு இடம் மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close