முதல்வருடன் புதிய தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி சந்திப்பு!

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 11:17 am
tn-secretary-dgp-meets-cm-edappadi-palanisamy

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகிய இருவரும் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, தமிழகத்தின் புதிய சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக ஜே.கே.திரிபாதி மற்றும் புதிய தலைமை செயலராக கே.சண்முகம் ஆகியோர்  பதவியேற்றனர்.

புதிதாக பதவியேற்றதையடுத்து, இருவரும் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

மேலும், பணி ஓய்வு பெறுவதையொட்டி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close