ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கான தடை நீட்டிப்பு!

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 11:51 am
sc-extends-ban-for-aarumugsamy-investigation-commission

அப்போலோ தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதை அடுத்து, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை 4 வாரங்களுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியது. இதை அடுத்து, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை 4 வாரங்களுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக,  2017 செப்டம்பர் முதல் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சமீபத்தில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கான விசாரணை காலத்தை 5வது முறையாக, மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close