குடிநீர் பிரச்னை: திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 12:38 pm
dmk-brings-special-resolution-for-water-scarcity

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், குடிநீர் பிரச்னை குறித்து சிறப்பு விவாத அனுமதிக்கு மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து திமுக உறுப்பினர்கள் இன்று அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாள் அன்று, மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அன்றைய தினம் முழுவதும் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று ஜூலை 1-ஆம் தேதி திங்கட்கிழமை தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடியுள்ளது. சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே, தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. குடிநீர் பிரச்சனை குறித்து இன்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பேச வேண்டும்; குடிநீர் பிரச்னை குறித்த இன்று நாள் முழுவதும் சிறப்பு விவாதம் நடைபெற வேண்டும் என்று கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

அதே நேரத்தில் ஜோலார்பேட்டையிலிருந்து ரயிலில் தண்ணீர் கொண்டுவருவதும், லாரிகளில் தண்ணீர் கொண்டு வருவதும் வரவேற்கத்தக்கது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

பின்னர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை குறித்து புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக மக்களை கேவலமான முறையில் கிரண்பேடி விமர்சித்துள்ளதாக கண்டனம் தெரிவித்தேன். நான் பேசியதை அவையில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் கூறினார். இதனை எதிர்த்தும், குடிநீர் பிரச்னை குறித்து சிறப்பு விவாதம் அனுமதிக்கு மறுப்பு தெரிவித்ததை எதிர்த்தும் அவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close