திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்! சண்டையை விலக்கச் சென்று, குழந்தையை பறிகொடுத்த நபர்..

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 01:52 pm
trichy-when-clash-between-two-people-bady-dies

திருச்சியில் இருவருக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாக ஒருவரது கையில் இருந்த 15 மாத குழந்தை பலியாகியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ரெங்கர். இவர் நேற்று இரவு  வீட்டிற்கு அருகே தனது குழந்தை நித்திஸ்வரனை தூக்கி வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அதே ஊரைச்சேர்ந்த செந்தில் என்பவர் அருகில் நின்ற ஆனந்தின் பணத்தை எடுத்து கொண்டதால், அதை குழந்தையின் தந்தை ரெங்கர் ஏன் அவனிடம் பணத்தை எடுக்கிறாய்? என்று கேட்ட போது செந்தில் அருகில் இருந்த மூங்கில் கட்டையை எடுத்து ரெங்கரை அடித்துள்ளார்.

அதில், அவர் கையில் வைத்திருந்த குழந்தை நித்திஸ்வரன் மீது பட்டதில் பலத்த காயமடைந்தது. நித்திஸ்வரன் முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான். 

தொடர்ந்து, குழந்தையை தாக்கிய செந்திலை கைது செய்து தொட்டியம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close