‘நான் கூறியது என் கருத்தல்ல; மக்களின் கருத்து’

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 03:55 pm
that-s-not-my-opinion-public-opinion-kiranbedi

சென்னை வறண்டது தொடர்பாக நான் கூறியது என் கருத்தல்ல; மக்களின் கருத்தே என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். மக்களின் கருத்தையே நானும் பதிவிட்டிருந்தேன் என கிரண்பேடி மேலும் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என குற்றம்சாட்டியிருந்த கிரண்பேடி, மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகுமுறையுமே பிரச்னைக்கு காரணம் எனவும் நேற்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ஆளுநர் கிரண்பேடி கருத்துக்கு கண்டனம் தெரிவித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்,  தமிழக மக்களிடம் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதற்கு பதிலிறுக்கும் வகையில் மக்களின் கருத்தையே தான் பிரதிபலித்ததாக கிரண் பேடி இன்று கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close