சொன்னமாதிரி அக்கவுண்டில் சம்பளம் போட்டாச்சு! எடுத்துக்கங்க தொழிலாளர்களே!!

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 05:26 pm
bus-workers-were-paid

போக்குவரத்து தொழிலாளர்கள் வங்கிக் கணக்குகளில் ஜூன் மாத ஊதியம் செலுத்தப்பட்டது என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஊதியம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜூன் மாத ஊதியம் வழங்கவில்லை என்று போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று காலை திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாலைக்குள் ஊதியம் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதை அடுத்து இன்று மதியத்திற்குமேல் ஊழியர்களின் வங்கிக்கணக்குகளில் ஊதியம் செலுத்தப்பட்டது.

எந்தவித முன்னறிவிப்பின்றி போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close