ஆளுநருக்கு அதிமுக கடும் கண்டனம்!

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 10:09 pm
water-issue-aiadmk-condemned-to-kiran-bedi

சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்த கருத்துக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ‘புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தன்னிலை உணராமல் தடித்த வார்த்தைகளைக் கூறலாமா?. தென்னிந்தியா முழுவதும் கடுமையான வறட்சியும், தண்ணீர் தட்டுப்பாடும் நிலவுகின்றது. உண்மைகளை உணராமல் ஏனோதானோ என கிரண்பேடி கருத்து கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தண்ணீர் பற்றாக்குறை குறித்து எந்த நேரத்தில் எதைக் கூற வேண்டும் என தெரியாமல் பேசியது பதவிக்கு அழகல்ல. காவிரி ஆற்று நீரில் புதுச்சேரிக்கும் சேரவேண்டிய உரிய பங்கினை பெற்றுத் தர பாடுபட வேண்டிய நேரமிது. கிரண்பேடி தனது பொறுப்பை தட்டிக்கழிக்காமல் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்து கண்ணியம் காக்க வேண்டும்’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என குற்றம்சாட்டியிருந்த கிரண்பேடி, மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகுமுறையுமே பிரச்னைக்கு காரணம் எனவும் அவர் நேற்று கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close