குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் திமுக தான் : ஹெச்.ராஜா

  அனிதா   | Last Modified : 02 Jul, 2019 02:06 pm
dmk-is-reason-for-shortage-of-drinking-water-h-raja

திமுகவின் பொறுப்பற்ற ஆட்சியே குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் திமுக தான் என்றும், திமுகவின் பொறுப்பற்ற ஆட்சியால் சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் அழிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  நீர்நிலையின் மீது கட்டப்பட்டிருப்பது வெட்கக்கேடு என குறிப்பிட்டுள்ளார்.  

 

— H Raja (@HRajaBJP) July 2, 2019

 

மேலும், காளை, எருதுகளை காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் சேர்த்தது திமுக ஆட்சியில் தான் என்றும், நெடுவாசல், மீத்தேன், நீட், காவிரியில் கர்நாடகா அணை கட்டியது, கச்சத் தீவை தார வார்த்தது இவை அனைத்தும் திமுக - காங்கிரஸ் ஆட்சியில் தான் என்றும் குறிப்பிட்ட அவர், இன்று கோரிக்கை போராட்ட வேஷம் நடத்துவதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.  

 

— H Raja (@HRajaBJP) July 2, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close