பயிற்சியின் போது விமானத்தில் இருந்து கழன்று விழுந்த பெட்ரோல் டேங்க்!

  அனிதா   | Last Modified : 02 Jul, 2019 10:09 am
petrol-tank-ejected-from-mig-21-aircraft

கோவை மாவட்டம் இருகூர் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 ரக விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் கழன்று விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் இருகூர் அருகே மிக் 21 ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, விமானத்தின் பெட்ரோல் டேங் கழன்று கீழே விழுந்தது. 1200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் என்பதால் கீழே விழுந்து சிதறி தீப்பிடித்தது. இதில் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த விமானம் பத்திரமாக சூலூர் விமான தளத்தில் தரையிறக்கப்பட்டது. பெட்ரோல் டேங்க் தரிசு நிலத்தில் விழுந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. சம்பவம் நடைபெற்ற இடத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close