10% இட ஒதுக்கீடு - அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்: முதலமைச்சர்

  அனிதா   | Last Modified : 02 Jul, 2019 12:52 pm
10-reservation-decision-at-all-party-meeting-chief-minister

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து கட்சிகளின் கருத்துக்களை கேட்டு முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில், பொருளாதராத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பேரவையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, இட ஒதுக்கீடு விவகாரத்தில் அனைவரும் ஒரே பாதையில் செல்ல வேண்டிய நிலையில் இருப்பதாகவும், 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சிகளின் கருத்துக்களை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் எனவும் எக்காரணத்தைக் கொண்டும் 69 சதவீத இடஒதுக்கீட்டை விட்டுவிடமாட்டோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close