கொலை மிரட்டல் வழக்கு: பிரபல தமிழ் நடிகருக்கு முன்ஜாமீன்!

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2019 03:35 pm
the-madurai-branch-of-the-madras-high-court-has-issued-a-conditional-bail-for-powerstar-srinivasan

வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கறிஞர் பாண்டி அளித்த புகாரில் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது மணப்பாறை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், விசாரணைக்காக சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் சீனிவாசன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close