ராமலிங்கம் கொலை: தென்காசியில் என்.ஐ.ஏ சோதனை

  அனிதா   | Last Modified : 03 Jul, 2019 08:38 am
ramalingam-murder-nia-raid-in-tenkasi

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அகமது ஷாலிக் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கும்பகோணத்தில், கட்டாய மதமாற்றத்தை எதிர்த்த திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர்  கடந்த ஏப்ரல் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான அகமது ஷாலிக் என்பவருக்கு சொந்தமான தென்காசி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close