வங்கி அதிகாரிகள் உதவியுன் ரூ.6 கோடி கையாடல்: 2 பேர் கைது

  அனிதா   | Last Modified : 03 Jul, 2019 08:58 am
rs-6-crore-fraud-with-help-of-bank-officers-2-arrested

கோவையில் வங்கி அதிகாரிகள் உதவியுடன் தனியர் நிறுவனத்தின் கணக்கில் இருந்து ரூ.6 கோடி கையாடல் செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கோவை - அவினாசி சாலை கருமத்தம் பட்டியில் தனலட்சுமி ஸ்பிண்டெக்ஸ் என்ற பெயரில் நடராஜன் மற்றும் அவரது மனைவி லீலாவதி ஆகியோர் நிறுவனம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்த போது, வங்கியில் கையிருப்பாக வைத்திருந்த ஒரு கோடி ரூபாய் உட்பட ரூ.6 கோடி ரூபாய் வரை குறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவில் நடராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அதே நிறுவனத்தின் பொது மேலாளராக பணியாற்றி வந்த கண்ணன் மற்றும் கணக்காளர் விவேக்குமார் என்கிற வினோத் ஆகிய இருவரும் முறைகேடாக நிறுவன நிதியை தங்களது மனைவி பெயர்களுக்கு மாற்றம் செய்தது தெரியவந்தது.

இவர்களுக்கு தனியார் நிறுவனத்தின் கணக்குகள் வைத்திருந்த திருச்சி சாலையில் உள்ள தமிழ்நாடு வங்கியின் துணை பொதுமேலாளர் சிவசுப்ரமணியம் மற்றும் மேலாளர் சிவசந்திரன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கண்ணன் மற்றும் விவேக்கை கைது செய்துள்ள போலீசார் இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வங்கி அதிகாரிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close